;
Athirady Tamil News

நாளை மோதப்போவது யார்? யாழ். மத்திய கல்லூரி – சென் ஜோன்ஸ் இடையிலான 23-வது ஒருநாள் சமர்!

0
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்றுவரும் 23வது ஒரு நாள் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஒவர் போட்டி நாளை 14ம் திகதி யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பிலான ஊடக சந்திப்பு அண்மையில் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியில் நடைபெற்றபோதே போட்டி ஏற்பாடுகள் தொடர்பாக பாடசாலை அதிபர்களால் அறிவிக்கப்பட்டது.
நாளை சனிக்கிழமை காலை 8 மணிக்கு போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்று
காலை 9.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் சென்ஜோன்ஸ் கல்லூரி 12 போட்டிகளிலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதேவேளை இரண்டு கல்லூரி இடையில் 119ஆவது ஆண்டாக நடைபெற்ற வடக்கின் பெரும் போர் கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி மூன்று விக்கெட்டுகளால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.