;
Athirady Tamil News

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 11-ந்தேதி தொடங்குகிறது!!

0

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருகிற 11-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை 10 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்க உள்ளது. அதையொட்டி 10-ந்தேதி மாலை கோவிலில் அங்குரார்ப்பணம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து 11-ந்தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் மீன லக்னத்தில் நடக்கிறது. அன்று இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 12-ந்தேதி காலை சூரிய பிரபா வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபா வாகன வீதிஉலா, 13-ந்தேதி காலை பூத வாகன வீதிஉலா, இரவு சிம்ம வாகன வீதிஉலா, 14-ந்தேதி காலை மகர வாகன வீதிஉலா, இரவு சேஷ வாகன வீதிஉலா, 15-ந்தேதி காலை திருச்சி உற்சவம், இரவு அதிகார நந்தி வாகன வீதிஉலா. 16-ந்தேதி காலை வியாக்ர வாகன வீதிஉலா, இரவு கஜ வாகன வீதிஉலா, 17-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு குதிரை வாகன வீதிஉலா,

18-ந்தேதி காலை தேரோட்டம் (போகி தேர்), இரவு நந்தி வாகன வீதிஉலா, 19-ந்தேதி காலை புருஷா மிருக வாகன வீதிஉலா, மாலை சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம், இரவு திருச்சி உற்சவம், 20-ந்தேதி காலை சூரிய பிரபா வாகன வீதிஉலா, திரிசூல ஸ்நானம், இரவு கொடி இறங்குதல், ராவணாசூர வாகன வீதிஉலா நடக்கிறது. இத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. மேற்கண்ட வாகனங்களில் உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மேள தாளம் மற்றும் மங்கல இறை இசை வாத்தியங்கள் இசைக்க வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

கபிலேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி வாகனச் சேவை விவரம் அச்சிடப்பட்ட புத்தகத்தை திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் தனது அலுவலகத்தில் வெளியிட்டார். அப்போது அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.