;
Athirady Tamil News

7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் வால்ட் டிஸ்னி!!

0

உலகம் முழுவதும் 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக வால்ட் டிஸ்னி அறிவித்துள்ளது. இதனால் ஊழியர்கள் தவித்து வருகின்றனர். உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்கா வால்ட் டிஸ்னி. பல்வேறு நாடுகளில் வால்ட் டிஸ்னி கேளிக்கை பூங்கா உள்ளது. வால்ட் டிஸ்னியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே, கொரோனா காலத்தில் 2020ம் ஆண்டு வால்ட் டிஸ்னி 32 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.

இந்நிலையில், 7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக வால்ட் டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை டிஸ்னி விரைவில் வெளியிட உள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.