;
Athirady Tamil News

புங்குடுதீவு சென்சேவியர் விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த விளையாட்டுவிழா!! (படங்கள் இணைப்பு)

0

புங்குடுதீவு சென்சேவியர் சனசமூக நிலையமும் விளையாட்டு கழகமும் இணைந்து

அண்மையில் புங்குடுதீவு ஈஸ்ரன் கழக மைதானத்தில் அக்கழகத்தினரின் முழுமையான ஒத்துழைப்போடு 15 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்றினை நடாத்தியிருந்தனர் . புங்குடுதீவை சேர்ந்த நசரெத் , ஈஸ்ரன் , அம்பாள் , நண்பர்கள் , வொரியர்ஸ் , சென்சேவியர் ஆகிய கழகங்கள் பங்குபற்றிய இத்தொடரின் இறுதியாட்டத்தில் புங்குடுதீவு பாரதி விளையாட்டுக்கழகத்தினை எதிர்கொண்ட புங்குடுதீவு வொரியர்ஸ் கழகத்தினர் இலகுவாக வெற்றி இலக்கினை அடைந்து வெற்றிக்கிண்ணத்தினையும் பணப்பரிசிலையும் தட்டிச்சென்றனர் . முதலாமிடத்துக்கான வெற்றிக்கிண்ணத்தினையும் பணப்பரிசிலையும் அமரர்களான கருணாகரன் சாரதாம்பாள் தம்பதிகளின் நினைவாக அவர்களது குடும்பத்தினரால் வெற்றிக்கிண்ணமும் பணப்பரிசிலும் வழங்கப்பட்டிருந்தன . இரண்டாவது இடத்தினை பெற்றுக்கொண்ட பாரதி கழகத்தினருக்கான வெற்றிக்கிண்ணத்தையும் பணப்பரிசிலையும் அமரர் ஜெகதீஷ்வரன் காந்தி ஆசிரியர் நினைவாக புங்குடுதீவு ஈஸ்ரன் விளையாட்டு கழகத்தினர் வழங்கியிருந்தனர் .

சென்சேவியர் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டித்தொடரில் முதலாமிடத்தை பாரதி விளையாட்டுக் கழகம் பெற்றுக்கொண்டது . முதலாமிடத்துக்கான வெற்றிக்கிண்ணத்தையும் , பணப்பரிசிலையும் அமரர் சிவலோகநாதன் கிருபாகரன் ( புங்குடுதீவு தனியார் பேருந்து சங்க தலைவர் கரன் ) அவர்களின் நினைவாக அவரது சகோதரர் சி. திவாகரன் வழங்கியிருந்தார் .

கரப்பந்தாட்டத்தில் இரண்டாவது இடத்தினை அம்பாள் விளையாட்டு கழகத்தினர் பெற்றுக்கொண்டனர் . இக்கழகத்திற்கான வெற்றிக்கிண்ணத்தையும் பணப்பரிசிலையும் புங்குடுதீவு நலன்புரி சங்க செயலாளர் பிள்ளைநாயகம் சதீஷ் தனது சகோதரி அமரர் பிள்ளைநாயகம் ரேணுகா நினைவாக வழங்கியிருந்தார் .

மேலும் இச்சுற்றுப்போட்டிகளில் நல் ஒழுக்கத்தினை வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களை திரு .கிறிஸ்ரிராஜ் ஜீவா , திரு . உதயசூரியன் கஜேந்திரன் ஆகியோர் வழங்கியிருந்தனர் .

புங்குடுதீவு சென்சேவியர் சனசமூக நிலையத்தின் முக்கியஸ்தர் திரு. விவேக் ராகுலனின் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் விருந்தினர்களாக தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளரும் வேலணை பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன் , பிரபல வர்த்தகர் திலீப் , புங்குடுதீவு – பிரான்ஸ் சவேரியார் ஒன்றிய தலைவர் செபமாலை மதன் , புங்குடுதீவு அனைத்து விளையாட்டு கழகங்களின் ஒன்றிய உறுப்பினர்களான நா. அழகேசன் , ஜெயபால் காளிதாஸ் , கருணாகரன் குணாளன் , சி. திவாகரன் , த.சஞ்சீவ் மற்றும் சமூகசேவகர்களான சு. கமனிற்றா , தர்மபிரகாசம் சசி , கிறிஸ்ரிராஜ் ஜீவா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர் .
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.