;
Athirady Tamil News

சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி நீண்டகால அடிப்படையில் இலங்கைக்கு உதவுமா?- முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவிப்பது என்ன?

0

நீண்ட கால கடன்பேண்தகுதண்மையை அடைவதற்கு இலங்கைக்கு நிறுவனரீதியான சீர்திருத்தங்கள் அவசியம் என சர்வதேச பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹங் தெரிவித்துள்ளார்.

சிஎன்பிசிக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சின்பிசி மேலும் தெரிவித்துள்ளதாவது

ஆர்ஜென்டீனா மொன்டிநீக்ரோ போன்ற நாடுகளில் புதிய அரசாங்கத்திற்கு நாணய விடயங்களில் உதவிய ஸ்டீவ் ஹங் இலங்கை நீண்ட கால கடன்பேண்தகு தன்மையை அடைவதற்கு நிறுவனரீதியான சீர்திருத்தங்கள் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

தென்னாசிய நாடு அதன் தசாப்தகால வரலாற்றில் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அதன் நிதிநிலையை ஸ்திரப்படுத்துவதற்கு கடந்த செப்டம்பரில் இணக்கம் காணப்பட்டபடி சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை பெறவேண்டியுள்ளது.

இந்த நாடுகளில் காணப்படும் விதிமுறைகளையும் நிறுவனங்களையும் நீங்கள் மாற்றினால் அன்றி நீண்டகாலமாக காணப்படுகின்ற நிலைமைகள் தொடர்ந்தும் நீடிக்கப்போகின்றன என ஜோன் ஹொப்ஹின்ஸ் பல்கலைகழக பேராசிரியராக உள்ள ஸ்டீவ் ஹங் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் உயர்மட்டத்தில் நீண்டகாலமாக அதேநபர்களே செயற்பட்டு வருகின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர் ஆகவே எதுவும் மாறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் முதல் இலங்கை உணவு மருந்து எரிபொருள் மின்சாரத்திற்கான கடும் போராட்டத்தை சந்தித்து வருகின்றது.இது சீற்றத்துடன் கூடிய ஆர்ப்பாட்டத்திற்கு வழிவகுத்ததுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டிலிருந்து தப்பியோடி பதவியை இராஜினாமா செய்யவேண்டிய நிலையை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து ஆறுதடவை பிரதமராக பதவி வகித்த ரணில்விக்கிரமசிங்கவை நாடாளுமன்றம் பிரதமராக தெரிவு செய்தது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் றீகனின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றிய ஹங் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கைக்கு நீண்டகால அளவில் உதவுமா என்பது குறித்து ஐயம் கொண்டுள்ளார்.

இலங்கை நிவாரணத்திற்காக பல தடவை சர்வதேச நாணயநிதியத்தி;ன் உதவியை நாடியுள்ளதை அவர் சுட்டிக்காட்;டியுள்ளார்.

1965 ம் ஆண்டிலிருந்து 16 தடவைகள் சர்வதேச நாணயநிதியத்திடம் சென்று தோல்வியடைந்த நாடு இலங்கை அவை அனைத்தும் தோல்வியடைந்தன என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் நிதிஉதவியால் நீங்கள் தற்காலிகமாக நிம்மதியடையமுடியும்,ஆனால் நீண்டகாலத்தில் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டங்கள் பலனளிக்காது எனவும் அவர் தெரிவிக்கின்றார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.