;
Athirady Tamil News

புடினின் அணுவாயுதம் – வெடித்தால் சூரியன் தெரிய 5 வருடங்கள் எடுக்கும்!

0

உலகிலேயே ரஷ்யாவிடம்தான் மிகவும் சக்திவாய்ந்த அணுகுண்டுகள் இருக்கின்றன. உலகிலேயே மிக அதிகமாக அணுகுண்டுகளை தயாரித்து வைத்திருக்கின்ற நாடும் ரஷ்யா தான்.

ரஷ்யாவிடம் 5,977அணுகுண்டுகள் இருப்பதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.

உலகத்தில் இதுவரை உருவாக்கப்பட்டுள்ள மிகப் பெரியதும், குண்டுகளுக்கெல்லாம் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுகின்றதுமான Tsar Bomba என்ற AN602 thermonuclear aerial bomb ரஷ்யாவிடம் தான் இருக்கின்றது.

Satan 2- அதாவது ‘சாத்தான்-2’ என்ற பெயரில் ரஷ்யர்களால் அழைக்கப்படுகின்ற Sarmat intercontinental ballistic missile , உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள அத்தனை ஏவுகணைகளையும் விட மிகவும் சக்திவாய்ந்த ஒன்று என்று கூறப்படுகின்றது.

உலகில் தற்பொழுதுள்ள எந்த வான்பாதுகாப்பு பொறிமுறைகளாலும் ரஷ்யாவின் இந்த ஏவுகணையை தடுத்த நிறுத்த முடியாது என்று கூறப்படுகின்றது.

இப்படியான நிலையில், ரஷ்யா தனது அணுவாயுதங்கள் சிலவற்றை பெலாரசுக்கு நகர்த்த இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் கடந்த வாரம் அறிவிதிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.