;
Athirady Tamil News

இலங்கையின் உணவுப் பொருள் இறக்குமதிச் செலவில் வீழ்ச்சி ; மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

0

பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைச் காய்கறிகள் மற்றும் ஏனைய காய்கறிகளை இறக்குமதி செய்வதற்காக நடப்பாண்டின் (2026) முதல் எட்டு மாதங்களில் செலவிடப்பட்ட தொகை, 261.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை 13.4 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் (2025) முதல் எட்டு மாதங்களில் (ஜனவரி – ஆகஸ்ட்) பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைச் காய்கறிகள் மற்றும் ஏனைய காய்கறிகளை இறக்குமதி செய்வதற்காக 301.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருந்தன.

இதற்கமைய, கடந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டின் முதல் எட்டு மாதங்களில் குறித்த நுகர்பொருட்களை இறக்குமதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இறக்குமதிச் செலவு 13.4 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

அதேபோல், நடப்பாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் குறித்த நுகர்பொருட்களை இறக்குமதி செய்வதற்காகச் செலவிடப்பட்ட தொகை 22.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை 16.7 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

கடந்த ஆண்டின் (2025) ஆகஸ்ட் மாதத்தில் இந்நுகர்பொருட்களை இறக்குமதி செய்வதற்காக 27.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.