;
Athirady Tamil News

சில மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை

0

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்காக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்ப்டி இன்று (30) மு.ப. 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் பி.ப. 11.30 மணி வரை செல்லுபடியாகும்.

இதற்கமைய, ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் அப்பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அனர்த்தங்களை குறைத்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.