;
Athirady Tamil News

5-வது திருமணத்தை நிறுத்திய ரூபெர்ட் முர்டாச்? !!

0

சர்வதேச ஊடகத்துறையின் ஜாம்பவானாக ரூபெர்ட் முர்டாச் அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல நாடுகளில் சுமார் 120-க்கும் அதிகமான பத்திரிகைகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ஏற்கனவே 4 முறை திருமணமாகி 4 மனைவிகளையும் விவாகரத்து செய்த ரூபெர்ட் முர்டாச், 92 வயதில் 5-வது முறையாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கடந்த மாதம் அறிவித்தார். கணவரை இழந்த மூத்த பெண் பத்திரிகையாளரும், மாடல் அழகியுமான 66 வயதான ஆன் லெஸ்லி ஸ்மித்துடன் காதல் வயப்பட்டதாகவும், வருகிற கோடை காலத்தில் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் முர்டாச் கூறினார்.

மேலும் இது தனது கடைசி காதலாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் ரூபெர்ட் முர்டாச்-ஆன் லெஸ்லி ஸ்மித் தங்களின் திருமணத்தை நிறுத்திவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிறிஸ்தவத்தை பரப்புவதற்கான ஆன் லெஸ்லி ஸ்மித்தின் பிரசங்கத்தால் ரூபெர்ட் முர்டாச் பெரிதும் சங்கடத்துக்கு ஆளானதாகவும், இதனால் ஏற்பட்ட மனகசப்பால் ரூபெர்ட் முர்டாச் தனது காதலை முறித்து கொண்டதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளன. எனினும் இந்த தகவல்கள் ரூபெர்ட் முர்டாச்-ஆன் லெஸ்லி ஸ்மித்தால் உறுதிப்படுத்தப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.