;
Athirady Tamil News

பணவீக்கம் சடுதியாக வீழ்ச்சி!!

0

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மை பணவீக்கம் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

மார்ச் மாதத்தில் காணப்பட்ட 50.3 வீத பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 35.3 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தளம்பல் மிக்க உணவு மற்றும் உணவல்லாப் பொருட்களின் விலைகள் எதிர்பார்த்ததை விட அதிகளவில் குறைவடைந்தமை பணவீக்க வீழ்ச்சிக்கு காரணம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2023 மார்ச்சில் 47.6 வீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் 2023 ஏப்ரலில் 30.6 வீதமாக குறைந்துள்ளது.

உணவல்லா பணவீக்கம் 2023 மார்ச்சில் 51.7 வீதத்திலிருந்து 2023 ஏப்ரலில் 37.6 வீதமாகக் குறைந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.