;
Athirady Tamil News

பேக்கரி உற்பத்திகள் விலை குறைக்கப்படுமா?

0

பேக்கரி உற்பத்திகளுக்காக முட்டைகள் வழங்கப்பட்ட போதிலும் எந்த பேக்கரி உற்பத்திகளும் விலை குறைக்கப்படவில்லையென அகில இலங்கை சிற்றுண்டிகள் உரிமையாளர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது.

“இந்தியாவிலிருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு தலா ரூ. 35 வீதம் பேக்கரிகளுக்கும் உணவகங்களுக்கும் முட்டை வழங்கப்பட்டது. ஆனாலம் பேக்கரி உற்பத்திகள் எதுவும் விலை குறைக்கப்படவில்லை. இது குறித்து நுகர்வோரிடம் வினவிய போது முட்டை விலை குறைந்த போது பேக்கரி பொருட்கள் விலை குறைக்கப்படவில்லையென தெரிவிக்கின்றனர்.

பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவரைத் தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை” என அகில இலங்கை சிற்றுண்டிகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.