;
Athirady Tamil News

துபாயில் கக்கன் பிறந்தநாளை கொண்டாடிய விடுதலை சிறுத்தைகள்!!

0

அமீரக விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக தியாகி கக்கன் பிறந்தநாள் விழா மற்றும் மாவீரன் முடக்கத்தான் பாண்டியன் நினைவு நாள் விழா துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அமீரக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் அசோகன், முத்தமிழ் வளவன், பொருளாளர் கண்ணதாசன் மற்றும் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழகத்தில் இருந்து வருகை புரிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

மேலும் இதில் சிறப்பு விருந்தினர்களாக ஹமீது யாசின், ஏபிஜே அப்துல் கலாம் இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் இயக்குனர் ரொட்டேரியன், குடந்தை அசரப், நஜீம் மரிக்கா, கமால் K.V.L, மீடியா அஸ்கர், அமமுக அமீரக நிர்வாகி சாதிக், பால் பிரபாகர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் அமீரக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் பிரேம்குமார், முகமது சித்தீக், முத்தழகு, ஜியாவுதீன், வாகை கிரன், வேல்முருகன் மற்றும் உறுப்பினர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.