;
Athirady Tamil News

அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி- நியூயார்க்கில் உற்சாக வரவேற்பு!!

0

பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை அமெரிக்காவிற்கு விமானத்தில் புறப்பட்டார். மோடி அமெரிக்காவில் 3-நாள் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார். இந்த பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்புவதற்கு முன் அவர் எகிப்து நாட்டிற்கும் செல்கிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் இறங்கிய பிரதமர் மோடிக்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சர்வதேச யோகா தினமான இன்று, பிரதமர் மோடி ஐநா தலைமையகத்தில் நடைபெறும் யோகா தின விழாவில் கலந்து கொள்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.