;
Athirady Tamil News

“நான் மோடியின் ரசிகன்”- நியூயார்க்கில் பிரதமருடனான சந்திப்பிற்கு பிறகு எலான் மஸ்க் பேட்டி!!

0

பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று இரவு நியூயார்க் சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். Powered By VDO.AI தொடர்ந்து நியூயார்க் அரண்மனைக்கு சென்ற பிரதமர் மோடி முக்கிய நபர்களை சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடி நியூயார்க்கில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் சி.இ.ஓ எலான் மஸ்கை சந்தித்து பேசினார். பிரதமர் மோடியின் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எலான் மஸ்க் கூறியதாவது:- பிரதமர் மோடி இந்தியா மீது மிகவும் அக்கரை கொண்டுள்ளார். தொடர்ந்து முதலீடுகளை கேட்டு வருகிறார். நான் மோடியின் ரசிகன். அவர் உண்மையில் இந்தியாவிற்கு சரியானதைச் செய்ய விரும்புகிறார்.

அவர் வெளிப்படையாக இருக்க விரும்புகிறார். நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறார். மேலும் வெளிப்படையாக, அதே நேரத்தில், அது இந்தியாவிற்கு சாதகமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறார். பிரதமருடன் இது ஒரு அற்புதமான சந்திப்பு. நான் அவரை மிகவும் விரும்புகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் எங்கள் தொழிற்சாலைக்கு வருகை தந்தார். எனவே, நாங்கள் ஒருவரையொருவர் சிறிது காலமாக அறிந்திருக்கிறோம். அடுத்த ஆண்டில் இந்தியா வர திட்டமிட்டுள்ளேன். ஸ்டார் லிங்க் இணைய சேவையை இந்தியாவிலும் கொண்டு வர விரும்புகிறேன். இது இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி சென்றடைய உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.