;
Athirady Tamil News

நான் இப்போது முழு உடல் தகுதியுடன் இருக்கிறேன்.. பிரதமர் மோடியை தகுதியாக மாற்றுவேன்- லாலு பிரசாத் யாதவ்!!

0

பீகார் முதல்வரம், ஐக்கிய ஜனதா தளம் கட்சித்தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதற்கிடையே, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜிரிவால், ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பேனர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் என 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 6 மாநில முதல் மந்திரிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், கூட்டம் முடிந்ததும் முதல் மந்திரி நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது:- இப்போது நான் முழு உடல் தகுதியுடன் உள்ளேன். இனி நரேந்திர மோடியை தகுதியாக மாற்றுவேன்… நாட்டின் நிலைமை தற்போது மோசமாக உள்ளது. ஜூலை மாதம் சிம்லாவில் மீண்டும் ஒரு கூட்ட நிரலை தயார் செய்வோம். 2024-ல் பாஜகவை எதிர்த்துப் போராட அந்தந்த மாநிலங்களில் பணியாற்றும்போது ஒன்றிணைந்து முன்னேறுவோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.