;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்!

0

எதிர்வரும் 25ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் (Volker Türk), யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க் (Volker Türk) , எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் மீது மனித உரிமை மீறல்கள்
நான்கு நாள்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தவுள்ளார். இதன் ஒரு பகுதியாகவே, அவர் (Volker Türk) யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தெரியவருகின்றது.

இதன்போது யாழ்ப்பாணத்தில் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் எனப் பலதரப்பினரையும் அவர் (Volker Türk) சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.

அத்துடன், இறுதிப்போரில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பான பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் தொடர்பிலும் அவர் ஆராய்வார் என்று தெரியவருகின்றது.

இலங்கை இராணுவத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுத் தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் மாத அமர்வில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இவ்வாறான நிலையில் , ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் (Volker Türk) யாழ்ப்பாண விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.