;
Athirady Tamil News

இந்திய இழுவைப் படகுகளை தடைசெய்ய தமிழ் கட்சிகள் ஓரணியில் வலியுறுத்த வேண்டும் – மீனவ அமைப்புக்கள் கோரிக்கை!!

0

இந்தியா செல்லும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எல்லைதாண்டிய இந்திய இழுவைப் படகுகளை தடை செய்யுமாறு தமிழ் கட்சிகள் ஓரணியில் வலியுறுத்த வேண்டும் என யாழ். மாவட்ட கடற்தொழில் சங்கங்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்தன.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள யாழ். மாவட்ட கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்களை இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றபோது அதில் பேசப்பட்ட விடயங்களை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம்.

அதில் குறிப்பிடும் போது 13 வது திருத்தச் சட்டம் தமிழரின் இனப் பிரச்சனை மற்றும் முல்லத்தீவு புதைகுழி விவகாரம் தொடர்பில் பேசப்பட்டது.

நாட்டினுடைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா செல்ல உள்ள நிலையில் பதின்மூன்று தொடர்பில் இந்திய பிரதமருக்கு தமிழ் கட்சிகள் கடிதம் ஒன்றை அனுப்ப உள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.

மீனவ சங்கங்களாகிய நாம் ஒன்றை கேட்க விரும்புகிறோம் இந்திய எல்லை தாண்டிய மீன்பிடி தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் எமது மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

இவ்வாறான நிலையில் எமது மீனவர் பிரச்சினை மற்றும் எல்லை தாண்டிய இந்தியா இழவைப் படகுகளை தடை செய்வது தொடர்பில் இந்திய பிரதமருக்கு விதமான கடிதங்களும் அனுப்புவதாகத் தெரியவில்லை.

தமிழ் கட்சிகளிடம் நாம் ஒன்றைக் கேட்க விரும்புகிறோம் எமது மீனவ சமூகம் தொடர்ச்சியாக இந்திய இழுவைப்படக்குகளால் பாதிக்கப்பட்டு வருகின்றது.

இந்தியா இழுவைப்டகுகளை கடற்படை கைது செய்துவரும் நிலையில் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் தொடர்ச்சியாக எல்லை தாண்டிய இந்திய ரோலர்களை கைது செய்ய வேண்டும்.

இன் நிலையில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சட்டவிரோத எல்லை தாண்டிய இந்தியா ரோலர்களை கைது செய்வதற்கான அழுத்தங்களை தொடர்ச்சியாக இலங்கை கடற்படைக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு பயணம் ஆவதற்கு போதிய கால அவகாசம் இருக்கின்ற நிலையில் தமிழ் கட்சிகள் ஓரணியில் நின்று எமது பிரச்சனை தொடர்பில் இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

குறித்த ஊடக சந்திப்பில் யாழ். மாவட்ட கடை தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன உப தலைவர் அந்தோணிப் பிள்ளை பிரான்சிஸ் ரட்ண குமார் மற்றும் வடமராட்சி வடக்கு கடை தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தின் தலைவர் செல்லத்துரை நற்குணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.