;
Athirady Tamil News

தெமோதரை பகுதியில் பஸ் விபத்து : 15 பேர் காயம்!

0

பதுளை, தெமோதரை ஹாலி எல பகுதியில் இன்று சனிக்கிழமை (15) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு – பதுளை தனியார் பஸ் ஒன்றே வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளை ஹாலி எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.