புடின் விடுத்துள்ள எச்சரிக்கை -பேராபத்தாக மாறப்போகும் உக்ரைன் களமுனை !!

உக்ரைனுக்கு எதிராக கொத்துக் குண்டுகளை பயன்படுத்துவதற்கு தமது படைகள் தயங்காது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனுக்கு இராணுவ உதவியாக அமெரிக்கா கொத்துக் குண்டுகளை வழங்கியதற்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்ய அதிபர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ரஷ்யாவிடம் போதுமான அளவு கொத்துக் குண்டுகள் கையிருப்பில் இருப்பதாகவும், அவற்றைப் பயன்படுத்த தமது இராணுவத்துக்கு உரிமை இருப்பதாகவும் ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா வழங்கிய கொத்துக் குண்டுகளை உக்ரைன் பயன்படுத்தினால், ரஷ்யப் படைகளும் அப்போது கொததுக்குண்டு தாக்குதல்களை நடத்த நடவடிக்கை எடுக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.