;
Athirady Tamil News

பெண்களின் கழுத்தில் கை: 9 பெண்கள் கைது !!

0

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் மற்றும் மரியாள் தேவாலயம் ஆகியவற்றின் திருவிழாக்களின் போது பெண்களின் கழுத்தில் அணியப்பட்டிருந்த பெறுமதியான நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் ஒன்பது பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3¼ பவுண் தங்க ஆபரணங்களை அறுத்து கொள்ளையிட்ட பெண் கொள்ளைக்குழுவைச் சேர்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர். எனினும், அதில் ஒரு பெண் தப்பியோடிவிட்டார்.

அத்துடன் ஆலயத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆலையத்தில் 5 பேருடைய 19 பவுண் தங்க சங்கிலிகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளது என மட்டு தமையைக பொலிஸார் தெரிவித்தனர்.

மரியாள் தேவாலய வருடாந்த திருவிழாவின் இறுதி நாள் இன்றாகும். (15) காலை 9 மணியளவில் திருப்பலி ஒப்பு கொடுத்து ஆராதனை முடிவுற்ற பின்னர் தேவாலய பகுதியில் தானமாக கஞ்சி வழங்கப்பட்டது.

அதனை வாங்கி கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த 2 அரை பவுண் கொண்ட தங்க சங்கிலியை 4 பேர் கொண்ட பெண் கொள்ளைக் குழுவினரைச் சேர்ந்த ஒரு பெண், அறுத் தொடுத்ததையடுத்து அவர் கள்ளன் என சத்தமிட்டுள்ளாh.;

இதனையடுத்து தப்பியோட முற்பட்ட பெண் கொள்ளைக்குழுவைச் சேர்ந்த 3 பெண்களை அங்கிருந்த மக்கள் மடக்கி பிடித்தனர் இதன்; போது ஒருவர் தப்பி ஓடியுள்ளார். இதனை தொடர்ந்து மடக்கி பிடித்த பெண் கொள்ளையர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து அவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு, வத்தளை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதி ஒருவர் உட்பட , 27, 33 வயதுடையவர்கள் எனவும் மூன்று பேரும் உறவினர்கள் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதேவேளை மாமாங்கேஸ்வரர் ஆலைய தேர்திருவிழாவான இன்று (15) காலை பக்தர்கள் தேர் இழுத்து கொண்டிருந்தபோது முதிய பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த முக்கால் பவுண் தங்க சங்கிலியை அறுத்தெடுத்த புத்தளம் பகுதியைச் சோந்த 45 வயது பெண் ஒருவரை கைது செய்தனர்.

களுவாஞ்சிக்குடி மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் ஏற்கெனவே இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புபட்டவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.