;
Athirady Tamil News

2,200 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள்… ஹோர்முஸ் நீரிணை அருகே வீசி ஈரானை மிரட்டிய அமெரிக்கா!

0

ஈரானின் ராணுவத்தை அச்சுறுத்தும் விதமாக ஹோர்முஸ் நீரிணை அருகே சுமார் 2,200 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகளைப் போட்டு அமெரிக்கா புதன்கிழமை தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அணுஆயுதக் கொள்கையைக் கைவிடக் கோரி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு ராணுவங்களும் சேர்ந்து கடந்த பிப். 28 ஆம் தேதி நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் மதகுரு உச்சத் தலைவர் அலி அயத்துல்லா கமேனி கொல்லப்பட்ட பின்னர், அமெரிக்கா – ஈரான் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தப் போர் இரண்டு வாரங்களைக் கடந்த நிலையிலும், அமெரிக்கா ராணுவத்தினர் ஈரானின் கட்டமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், உலகளவிலான வர்த்தகத்தை இணைக்கும் கடல்வழிப் பாதையான ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதியில் ஹோர்முஸ் நீரிணை அருகே சுமார் 5,000 பவுண்ட் (2,200 கிலோ) பங்கர் பஸ்டர் குண்டுகள் போடப்பட்டதாகவும், இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாகவும் அமெரிக்க ராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்கள், ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த ஈரானின் கப்பல் எதிர்ப்பு க்ரூஸ் கப்பல் மீது ஏவுகணைகளைக் குறிவைத்ததாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரானில் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைகளில் எங்களுக்கு விருப்பமில்லை என பெரும்பாலான நேட்டோ நட்பு நாடுகள் தெரிவித்திருந்த நிலையில், சில மணிநேரங்களிலேயே இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது உலகளவில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.