கொல்லப்பட்ட 111 குழந்தை…லெபனான் மீது இஸ்ரேலின் தொடர் தாக்குதல்: பலி எண்ணிக்கை 912 ஆக உயர்வு
லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல்
லெபனானின் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய ஹிஸ்புல்லா படையினருக்கு எதிராக இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 912 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட 912 பேரில் 111 பேர் குழந்தைகள் என்றும், 67 பேர் பெண்கள் மற்றும் 38 பேர் சுகாதார பணியாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2,221 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று வரை 886 ஆக இருந்த பலியானோர் எண்ணிக்கை, இன்று ஒரே நாளில் 912 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், பெய்ரூட் உட்பட லெபனானின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில், ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர், இதனை தொடர்ந்து இஸ்ரேலிய படைகள் பதிலடி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.