;
Athirady Tamil News

லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

0

சந்தையில் தற்போது போதுமான எரிவாயு இருப்பு இருப்பதாகவும், நிரப்பும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒருமுறை எரிவாயு ஏற்றிய கப்பல் வந்தடைவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.

எரிவாயு கையிருப்பு
நாட்டுக்கு தேவையான எரிவாயு கையிருப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரையில் உள்ளதாகவும்,மேலதிக எரிவாயு இருப்புக்கள் மாலைத்தீவிலுள்ள சேமிப்பு நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

எரிவாயுவை ஏற்றிய கப்பல் அமெரிக்காவிலிருந்து விரைவில் மாலைத்தீவை வந்தடையும் எனவும், மேலும் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவைக் கொண்ட மற்றொரு கப்பல் ஏப்ரல் 20ஆம் திகதி வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், எந்தவித இடையூறுமின்றி விநியோகத்தைத் தொடர்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சன்ன குணவர்தன பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.