;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தானில் தேசிய பூங்காவுக்கு பெண்கள் செல்லக்கூடாது- தலிபான்கள் மேலும் ஒரு தடை!!

0

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றிய தலிபான்கள், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். உயர்நிலை கல்வி பயில பெண்களுக்கு தடை விதித்தனர். பல்கலைக்கழகங்கள், அரசு சாரா நிறுவனங்கள் போன்றவற்றில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தேசிய பூங்காக்களுக்கு பெண்கள் செல்லக்கூடாது என்று தலிபான்கள் மேலும் ஒரு தடை விதித்துள்ளனர். இதுகுறித்து தலிபான் அரசின் நல்லொழுக்கம் துறை துணை மந்திரி காலித் ஹனாபி கூறும்போது, ‘பூங்காவுக்கு செல்லும்போது பெண்கள் ஹிஜாப் அணிவதில் சரியான முறையை கடைபிடிப்பதில்லை. பெண்கள் பூங்காவுக்கு செல்வதற்கான விதிமுறைகள் தயாராகி வருகின்றன. அதுவரை பெண்கள் பூங்காவுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.