;
Athirady Tamil News

தனது பணியை வெற்றிகரமாக முடித்த பிரக்யான்: மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட இஸ்ரோ !!

0

சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் தனது பணியை வெற்றிகரமாக முடித்ததாக இந்திய ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவை ஆராயும் நோக்கில் கடந்த மாதம் 23ம் திகதி சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

நிலவின் வெப்ப கடத்துத்திறன் மற்றும் வெப்பநிலையை தெரிந்து கொள்வதற்காக ChaSTE கருவியும் தரையிறங்கும் இடத்தை சுற்றி நில அதிர்வு தொடர்பாக ஆராய்வதற்காக ILSA கருவியும் மின் திறன் கொண்ட துகள்களை பற்றி ஆராய LP கருவியும் விக்ரம் லேண்டரில் அனுப்பப்பட்டுள்ளன.

தற்போது வரை நிலவில் 100 மீட்டர் தூரத்தை கடந்து ரோவர் உலா வந்து கொண்டிருப்பதாக இஸ்ரோஅறிவித்துள்ளது.

இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரும், ரோவரும் இன்னும் இரண்டு அல்லது மூன்று செயலிழக்க தொடங்கும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருக்கிறார்

ஏனென்றால், நிலவில் அடுத்த 14 நாட்கள் இரவு என்பதால் ரோவர் மற்றும் லேண்டரின் செயல்பாடுகள் செயலிழக்க தொடங்கும் என்று தெரிவித்தார்.

நாம் வசிக்கக்கூடிய பூமியை பொறுத்தவரை ஒரு நாள் என்பது 12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவு என்று குறிக்கிறது. ஆனால் நிலவில் ஒரு நாள் என்பது பூமியின் 28 நாளை குறிக்கிறது. நிலவில் தொடர்ந்து 14 நாட்கள் பகலும், அடுத்த 14 நாட்கள் இரவாகவும் இருக்கும்.

இதனால் அங்கு ஒரு நாள் என்பது பூமியின் 28 நாட்களுக்கு சமமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தான் பகல் தொடங்கும் நாளில் லேண்டரை நிலவில் விஞ்ஞானிகள் தரையிறக்கினர்.

அடுத்த 14 நாட்கள் சூரிய வெப்பத்தை பயன்படுத்தி ரோவர் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. நிலவின் மேற்பரப்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து ஆய்வுகளும் நிலவின் பகல்பொழுதில் 14 நாட்களுக்குள் முடிவிடக்கூடிய வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது இரவு நீடிக்கும் 14 நாட்களில் நிலவும் உறைபனிக் குளிர் காரணமாக, கருவிகளின் பாகங்களில் விரிசல்கள் ஏற்படலாம். இதனால், லேண்டர், ரோவர் கருவிகள் இயங்காமல் போகவும் வாய்ப்பிருந்தது.

இந்தநிலையில், சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் தனது பணியை வெற்றிகரமாக முடித்ததாக இஸ்ரோ அறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில், “ரோவர் தனது பணிகளை முடித்தது. ரோவர் தற்போது பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு, ஸ்லீப் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. APXS மற்றும் LIBS பேலோடுகளில் இருந்து தரவானது லேண்டர் வழியாக பூமிக்கு அனுப்பப்படுகிறது.

தனது பணியை வெற்றிகரமாக முடித்த பிரக்யான்: மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட இஸ்ரோ | Successfully Completed Pragyaan Rover Mission Isro

ரோவருக்குள் இருக்கும் பேட்டரிகள் தற்போது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரோவரின் கருவிகள் இயக்கத்தில் இருக்கிறது” என தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.