;
Athirady Tamil News

அனுபவமற்ற ஜூனியரை அனுப்பலாமா? – வக்கீலுக்கு ரூ.2,000 அபராதம் விதித்த நீதிபதிகள்!!

0

சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, அந்த வழக்கில் ஆஜராக வேண்டிய வக்கீல் அங்கு வராமல், அவருக்கு பதிலாக ஜூனியரை அனுப்பி வைத்திருந்தார். வழக்கில் ஆஜரான அந்த ஜூனியர், முதன்மை வக்கீல் இல்லாததால் விசாரணையை ஒத்திவைக்கும்படி கோரினார். இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், வழக்கு வாதத்தை துவக்கும்படி அந்த ஜூனியருக்கு உத்தரவிட்டனர். ஆனால் வழக்கு குறித்த ஆவணங்கள் எதுவும் இல்லை என அவர் கூறியதைக் கேட்டு ஆத்திரமடைந்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட வக்கீலை உடனே ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.

இதனால் சம்பந்தப்பட்ட வக்கீல் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜரானார். நேரில் வராததற்கு மன்னிப்பும் கோரினார். அப்போது அவரிடம் நீதிபதிகள், தகுந்த முன்னேற்பாடு மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி ஜூனியர் வக்கீலை அனுப்பி வைத்தது ஏன் என கேள்வி எழுப்பினர். மேலும், உரிய முறையில் நடந்துகொள்ள தவறியதால், சுப்ரீம் கோர்ட் வக்கீல் சங்கத்தில் 2,000 ரூபாயை செலுத்தி அதற்கான ரசீதை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த வக்கீலுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.