;
Athirady Tamil News

கணுக்காலை இழந்த மதுரை ஜூடோ வீரருக்கு அமைச்சர் உதயநிதி நிதியுதவி!!

0

மதுரை கோச்சடை முத்துராமலிங்க தேவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தம் என்பவரது மகன் பரிதி விக்னேஸ்வரன் (வயது 19). இவர் கோவை கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் ஜூடோ விளையாட்டு வீரரான பரிதி விக்னேஸ்வரன் பல்வேறு போட்டிகளிலும் கலந்துகொண்டு ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் மாநில அளவில் நடைபெற இருந்த ஜூடோ போட்டியில் கலந்து கொள்வதற்காக கடுமையான பயிற்சி மேற்கொண்டு வந்தார். இதற்கிடையே ஜூலை மாதம் கோச்சடை பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்ற போது வழியில் பழுதான அந்த மின்கம்பத்தை மின்சார வாரியத்தினர் கிரேன் மூலம் அகற்றும் பணியில் இருந்தனர்.

இதில் எதிர்பாராதவிதமாக கிரேனில் இருந்த மின்கம்பம் அறுந்து சாலையில் சென்று கொண்டிருந்த பரிதி விக்னேஸ்வரன் மீது விழுந்தது. உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மருத்துவமனையில் அவரது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கணுக்கால் வரையில் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. போதிய வருவாய் இன்றி தவித்து வரும் தனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்றும், பலத்த காயம் அடைந்துள்ள தனது மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் மாணவரின் தாய் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தநிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை வந்துள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விபத்தில் கணுக்காலை இழந்த ஜூடோ விளையாட்டு வீரர் பரிதி விக்னேஷ்வரனை தான் தங்கியிருந்த ஓட்டலில் நேரில் சந்தித்து ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.