;
Athirady Tamil News

சமாதான முயற்சியில் கனடா: என்ன முடிவு எடுக்கப்போகிறது இந்தியா..!

0

கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் என கனேடிய பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

காலீஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜர் கனடாவில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதன் விளைவாக இன்று இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பாரியளவு விரிசல் உருவாகியிருக்கிறது.

காலிஸ்தான் அமைப்பின் தலைவரின் கொலையில் இந்திய அரசின் உளவாளிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் கூறியது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருந்தது.

மேலும் இந்த விடயத்தின் அடுத்த கட்டமாக கனடாவில் இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரி பவன்குமார்ராய் ஐ கனேடிய அரசு நாட்டை விட்டு வெளியேற்றியதும் அதற்கு பதிலடியாக இந்தியாவின் கனடா தூதரக உயர் அதிகாரியை வெளியேறும் படி இந்திய அரசு உத்தரவிட்டதுமாக பிரச்சினை வளர்முகம் கண்டது.

அத்துடன் நின்றுவிடாமல், கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்தியா இடைக்கால தடை உத்தரவினையும் பிறப்பித்திருந்தது இது கனடா இந்தியா இடையேயான உறவினை கடுமையாக பாதிக்கப்படையச் செய்துள்ளது.

இதற்கிடையில், கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக விசா வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே, கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் என கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.
இணைந்து பணியாற்ற

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

“இந்த விவகாரம் தொடர்பாக நான் பிரதமர் மோடியிடம் வெளிப்படையாக உரையாடினேன், அப்போது என் கவலைகளை பகிர்ந்துகொண்டேன், இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ளவும், முழு வெளிப்படைத் தன்மையை வெளிப்படுத்த எங்களுடன் இணைந்து பணியாற்றவும் இந்திய அரசை கேட்டுக்கொண்டேன்” என்று அவர் கூறினார்.

“மேலும் இந்தியா வளர்ந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடு, நாம் உலகெங்கிலும் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய ஒரு நாடு, நாங்கள் பிரச்சினைகளைத் உருவாக்கவோ அல்லது அதிகப்படுத்தவோ நினைக்கவில்லை, இந்த விடயத்தின் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான செயல்முறைகளை மேற்கொள்ள எங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு இந்திய அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.” என்று அவர் கூறியதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.