;
Athirady Tamil News

கனேடிய பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்..!

0

இந்தியா கனடா உறவுகளில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என கனடாவில் வாழும் இந்தியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்ட நிலையில், அந்தச் சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக ட்ரூடோ குற்றம் சாட்டினாலும், இதுவரை அதற்கான எந்த ஆதாரங்களையும் அவர் இதுவரை வெளியிடவில்லை.

இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியர்களின் கருத்து
இந்நிலையில், கனடாவில் வாழும் இந்தியரான Dr Raj Jagpal என்பவர் தெரிவிக்கையில், கனடா அரசு கனடாவில் வாழும் இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையில் பிரிவினையை உண்டாக்குகிறது. இது மிகவும் தவறு.

ட்ரூடோ ஒன்றில் பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்.தேர்தலில் வாக்குகள் கிடைப்படதற்காக அரசு பிரிவினையை உண்டாக்குகிறது என்கிறார்.

கனடாவில் வாழும் மற்றுமொரு இந்தியர் தெரிவிக்கையில், ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

தீவிரப் போக்கு கொண்டவர்கள் வெறும் இரண்டு சதவிகிதத்தினர் தான் கனடாவில் இருக்கிறார்கள் ஏனைய சீக்கியர்கள் அப்படிப்பட்டவர்களல்ல.

கனேடிய பிரதமர் உறுதியான ஆதாரங்களை அளித்திருக்கவேண்டும். அவருடைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் இந்தியா கனடா உறவுகளில் பிரிவும் பிளவும் ஏற்பட்டுள்ளன என்கிறார் அவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.