;
Athirady Tamil News

இலங்கை இந்திய கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிட்டால் களப்பலிகள் ஏற்படும்: எம்.பி.சுப்பிரமணியம் எச்சரிக்கை

0

இலங்கை கடலில் இந்திய கடற்றொழிலாளர்கள் மீன்பிடிப்பது என்ற இந்திய தரப்பின் முன்மொழிவை இலங்கை அரசாங்கம் இரத்து செய்யாவிட்டால் நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடித்து, கடலில் முரண்பாடுகள் ஏற்பட்டு களப்பலிகள் ஏற்படும் என வடக்கு மாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.பி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (08.10.2023) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஓரிரு தினங்களுக்கு முன்னர் எமது நாட்டு பிரதமர் இந்தியா சென்றிருந்த வேளையிலே எமது வீரர்களுடைய பிரச்சினை சம்பந்தமாக அங்கு ஒரு கலந்துரையாடல் நடந்திருக்கின்றது.

அங்கிருந்த டைம்ஸ் பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவருடைய கேள்விக்கு நமது நாட்டு பிரதமர் பதில் அழைத்து இருக்கிறார். அந்த கேள்வியானது இலங்கை கடற்பரப்புக்குள்ளே இந்திய கடற்றொழிலாளர்கள் மீன் பிடிப்பது சம்பந்தமாக முன்மொழிக்கப்பட்டிருக்கின்றது.

நல்ல கடற்றொழில் மையம்
அது சம்பந்தமாக உங்களுடைய நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பின போது, அதற்கு பிரதமர் பிரதமர், இலங்கையின் வடக்கு கடல் மிகவும் நல்ல கடற்றொழில் மையமாக இருக்கின்றது.

அதன் காரணமாக இந்தியாவில் உள்ள கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்புக்குள்ளே மீன் பிடிப்பதற்கு இந்தியாவினால் முன்னொளியப்பட்டிருக்கின்றது. அது சம்பந்தமாக நாம் கரிசினையோடு ஆய்வு செய்து வருகின்றோம்.

இது இரு நாட்டு அரசுகளும் பேசி தீர்க்கக் கூடிய ஒரு விடயம் அல்ல. இது கடற்றொழிலாளர்களுடைய வாழ்வாதாரப் பிரச்சினை. எனவே கடற்றொழிலாளர்கள் தான் இதைப் பற்றி பேசி ஒரு நல்ல இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.

முன்மொழிவுக்கு ஒரு விடை
எனவே இருநாட்டு கடற்றொழிலாளர்களும் புரிந்துணர்வுடன் பேசி நல்ல ஒரு கருத்தையும் இணக்கப்பாட்டையும் எட்ட வேண்டும் என்றும், அந்த வகையில் இந்த முன்மொழிவுக்கு ஒரு விடை கிடைக்கும் என்ற கருத்து வெளியிடப்பட்டிருக்கின்றது.

அவர் பேசியிருக்கின்ற பேச்சின் பிரகாரம் இலங்கை கடற்பிறப்புக்குள்ளே இந்திய மீனவர்களை மீன்பிடிப்பதற்கு அனுமதிப்பதற்கான ஒரு தொனி அங்கே தெளிவாக தென்படுகின்றது.

இது இலங்கை வடபுலத்திலே வாழுகின்ற மீனவர்களுக்கு ஒரு ஏமாற்றத்தை தந்துள்ளது. எமது கடற்பரப்புக்குள்ளே அந்நிய கடற்றொழிலாளர்கள் அல்லது இந்திய கடற்றொழிலாளர்கள் மீன்பிடிப்பது என்பது காலம் காலமாக எமது மீனவர்களிடையே ஒரு முரண்பாட்டையும் ஒரு களப்போரையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.