;
Athirady Tamil News

தவணைமுறையில் மின்சார கட்டணம்: விடுக்கப்பட்ட கோரிக்கை

0

ஒரு வீட்டின் மாதாந்திர மின்கட்டணத்தைச் செலுத்துவதற்கு தற்போது வழங்கப்பட்டுள்ள 40 நாட்கள் கால அவகாசத்தை நீடிக்கவும், மின்கட்டணத்தை தவணை முறையில் செலுத்துவதற்கான அமைப்பைத் தயாரிக்கவும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் மின்சார பாவனையாளர்களின் எண்ணிக்கை 68 இலட்சம் எனவும், இவ்வருடம் 3 தடவை மின்சாரக் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்டதாகவும், 2022ஆம் ஆண்டு 180 அலகுகளை மாதாந்தம் பாவிக்கும் மின்சார பாவனையாளரிடமிருந்து மின்சாரக் கட்டணமாக 3,755.00 ரூபா மட்டுமே அறவிடப்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.

எவ்வாறாயினும், தற்போது 180 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தும் மின்சார வாடிக்கையாளருக்கு அண்ணளவாக 10,500.00 ரூபா செலுத்த வேண்டியுள்ளதாகவும், அந்த தொகை பாரிய தொகை எனவும், மின் கட்டணத்தை செலுத்த வாடிக்கையாளருக்கு 40 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கோரிக்கை
இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியினால் குடும்பமொன்றின் வருமானம் கணிசமான அளவு கூட அதிகரிக்கவில்லை பெரும்பாலும் குடும்பங்களின் வருமானம் மேலும் குறைந்துள்ளது.

இதனால், மக்கள் மின்கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இந்நிலையில் மின்கட்டணம் செலுத்த வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை அந்த அமைப்பு இதுவரை நீட்டிக்கவில்லை எனவும், காலத்தை நீட்டிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.