;
Athirady Tamil News

இனி நீட் தேர்விற்கு ஹிஜாப் அணிந்து செல்லலாம்.. உரிமையை பறிக்க முடியாது – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

0

மாணவர்கள் இனி நீட் தேர்விற்கு ஹிஜாப் அணிந்து செல்லலாம் என்று கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஹிஜாப்
கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. முதல்வர் சித்தராமையா, கல்வி அமைச்சர் சுதாகர் தலைமையில் கல்வித் துறை முன்னேற்றங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதில் தேர்வுகள் எழுத வரும் மாணவர்கள் மற்றும் அரசு போட்டித் தேர்வு எழுதும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர்
இந்நிலையில், கல்வித்துறை அமைச்சர் சுதாகர், “இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இங்கு யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உடை அணிந்துகொள்ள உரிமை உள்ளது. ஆகவே, போட்டித் தேர்வுகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் அணிந்த மாணவிகள் தேர்வுக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே மையத்தில் ஆஜராக அறிவுறுத்தப்படுவார்கள்.

மாணவிகள் முழுமையாக பரிசோதனை செய்த பின்னரே தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். இந்த விஷயத்தில் முறைகேடுகள் நடக்கவே வாய்ப்பில்லை. நீட் நுழைவுத் தேர்விலும் கூட இதுபோன்ற நடைமுறை அனுமதிக்கப்படுகிறது” என்றார்.

மேலும், “ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதும் விவகாரத்தில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். அவர்களின் லாஜிக் என்னவென எனக்கு புரியவே இல்லை. இது ஒரு திட்டமிட்ட போராட்டம். மதச்சார்பற்ற நமது நாட்டில் ஒருவரின் உரிமைகளை மற்றொருவர் பறிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.