;
Athirady Tamil News

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் : இன்றைய நாணயமாற்று வீதம்

0

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (26) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321 ரூபா 39 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 331 ரூபா 93 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 387 ரூபா 14 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 402 ரூபா 76 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 337 ரூபா 41 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 352 ரூபா 11 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 08 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 241 ரூபா 81 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபா 12 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 210 ரூபா 28 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 73 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 243 ரூபா 31 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கொள்முதல் பெறுமதி
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.91 ரூபாயிலிருந்து 320.18 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 333.18 ரூபாயிலிருந்து 332.42 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 319.50 ரூபாயிலிருந்து 320.16 ரூபாயாகவும் அதிகரித்துள்ள வேளை விற்பனைப் பெறுமதி 330.50 ரூபாயாக மாறாமலுள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 322 ரூபாய் மற்றும் 332 ரூபாயாகவும் மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.