;
Athirady Tamil News

ஏஐ தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது: சத்ய நாதெல்லா அறிவுறுத்தல்

0

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை நிறுவனங்கள் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என்று மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து சத்யநாதெல்லா கூறியதாவது: மேம்பட்ட ஏஐ மாடல்களைப் பயன்படுத்தும்போது, தவறு ஏற்பட்டால் அவற்றை உடனடியாக நிறுத்தும் வகையிலான கட்டுப்பாட்டு அமைப்புகள் அவசியம். ஏஐ தொழில்நுட்பத்தின் செயல்பாடுகளை மனிதர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதன் பாதுகாப்பு குறித்து தயாரிப்பு நிறுவனங்கள் அளிக்கும் உறுதிமொழிகளை மட்டுமே நம்பக்கூடாது.

மேலும், ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் முடிவெடுக்கும் அதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்ற அனுமதிக்கக் கூடாது. எவ்வளவு மேம்பட்ட ஏஐ மாடலாக இருந்தாலும், அதன் செயல்பாடுகள் மனிதர்கள் புரிந்துகொள்ளும் வகையில் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

ஏஐ தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை அப்படியே நம்புவதை நிறுத்த வேண்டும். நிறுவனங்கள் மிகவும் ஆற்றல் வாய்ந்த மேம்பட்ட ஏஐ மாடல்களைப் பயன்படுத்தும்போது, அவற்றுக்கு ஒரு ‘எமர்ஜென்சி பிரேக்’ போன்ற கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க வேண்டும்”என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.