;
Athirady Tamil News

604 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்; ரூ.4000 கோடி மதிப்பில் வாகனங்கள் – யார் இந்த கோடீஸ்வரர்!

0

சுல்தான் ஹசனல் போல்கியா கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஹசனல் போல்கியா
1967ல் புருனே மன்னராக ஹசனல் போல்கியா பொறுப்பேற்றார். உலகின் மெகா கோடீஸ்வரர்களில் ஒருவர். மிகப்பெரிய கார் பிரியர். அதிக ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருப்பவர் என்ற முறையில் இவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

தற்போது, 604 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.4,000 கோடி. 1990களில் நடுப்பகுதியில் வாங்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் பென்ட்லி கார்களில் கிட்டத்தட்ட பாதி சுல்தானுக்கும் அவரது குடும்பத்தினருக்கு சென்றது.

கின்னஸ் சாதனை
இவர் வசிக்கும் இஸ்தானா நூருல் இமான் அரண்மனை, 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டது. ரூ.2,550 கோடி மதிப்பிலான 22 காரட் தங்கத்தில் அரண்மனையின் குவிமாடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அவரிடம் ரூ.92 கோடி மதிப்பிலான வைரங்கள் உள்ளன. இவருக்கு 3 மனைவிகள் மூலம் 5 மகன்களும், 7 மகன்களும், 18 பேரப் பிள்ளைகளும் உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.