;
Athirady Tamil News

யாழில். இலவச நீரிழிவு பரிசோதனை முகாம்

0

உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு யாழ்.நீரிழிவு கழகம் நடத்தும், இலவச நீரிழிவு பரிசோதனை யாழில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நாளைய தினம் சனிக்கிழமை காலை 08 மணி முதல் மாலை 03 மணி வரையில் நடைபெறவுள்ளது.

அதன் போது , நீரிழிவு பரிசோதனை , பி.எம்.ஐ உடற்திணிவு சுட்டி , இரத்த அழுத்தம் , கண்பார்வை , வாசிப்பு திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக வாசிப்பு திறன் கண்ணாடி வழங்கல் என்பன இடம்பெறவுள்ளது.

எனவே இலவசமாக நடைபெறும் இந்த மருத்துவ முகாமில் கலந்த்து கொண்டு , சகலரும் பயன்பெறுமாறு ஏற்பாட்டு குழு அழைப்பு விடுத்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.