;
Athirady Tamil News

பாம் எண்ணெய் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை

0

நுகர்வோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட பாம் எண்ணெய் (Palm Oil) இறக்குமதித் தடையை மீண்டும் நீக்குவதற்கு சில தரப்புகள் ஆயத்தமாகி வருவதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

பாம் எண்ணெய் இறக்குமதி மீதான தடையை எக்காரணம் கொண்டும் நீக்க வேண்டாம் என அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அவர் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் நேற்று (2) கையளித்துள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரஞ்சித் விதானகே, இந்த இறக்குமதி முயற்சிக்கு பின்னால் ஊழல் நிறைந்த அதிகாரிகளும், மோசடி வியாபாரிகளும் செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் மோசடி வர்த்தகர்களும் ஊழல் அதிகாரிகளும் உள்ளனர்.

எனவே, இது குறித்து நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். இறுதியாக நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நாட்டிற்கு பாம் எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டாம் என்பதே ஆகும்” எனக் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.