தேநீர் அருந்தியபடியும், ட்ராக்டர் ஓட்டியும் வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்
மதுராந்தகத்தில் தேநீர் அருந்தியபடியும், ட்ராக்டர் ஓட்டியும் முதல்வர் விஜய் வாக்கு சேகரித்து வருகிறார்.
ட்ராக்டர் ஓட்டிய முதல்வர் விஜய்
மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து வாக்கு சேகரிக்க முதலமைச்சர் விஜய் நேற்று பிற்பகல் 2.30 மணி முதல், மதுராந்தகத்தில் சாலை வலம் மேற்கொண்டு வருகிறார்.
அவர் செல்லும் வழியெங்கும் ஏராளமான பொதுமக்கள் இருபுறமும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பொதுமக்கள் கொடுத்த மனுக்களை முதல்வர் விஜய் பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்து,சாலையோரம் இருந்த தேநீர் கடையில் தேநீர் அருந்தியபடி அங்கிருந்த மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அதைத்தொடர்ந்து, விவசாய நிலத்தில் இறங்கி ட்ராக்டர் ஒட்டினார். அங்கிருந்த மக்களுடன் புகைப்படம் எடுத்ததுடன் அவர்களிடம் வாக்கு சேகரித்தார்.