;
Athirady Tamil News

சென்னையின் பிரபல நட்சத்திர ஹோட்டல் மூடல் – கனத்த இதயத்துடன் அறிவிப்பு!

0

கிரவுன் பிளாசா ஹோட்டல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரவுன் பிளாசா
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள டி.டி.கே. சாலையில் 5 ஸ்டார் ஹோட்டலான கிரவுன் பிளாசா அமைந்துள்ளது. முன்னதாக அடையாறு ஷெரடன் பார்க் & டவர்ஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது.

தொடர்ந்து, 2015ல் இன்டர்கான்டினென்டல் ஹோட்டல் குழு இதனை வாங்கியபின் கிரவுன் பிளாசா எனப் பெயரிட்டது. இந்த ஹோட்டல் 283 அறைகளையும், 32 suites, ஐந்து உணவகங்கள், 8 அடுக்குமாடிகளை கொண்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு
இந்நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிர்வாகம், இத்தனை ஆண்டுகாலம் தங்களுக்கு கொடுத்த விசுவாசத்திற்கும் ஆதரவிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. ஹோட்டல் கட்டிடத்தை பிரபல கட்டுமான நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளாக கட்டவுள்ளது.

டிசம்பர் 20, முதல் விருந்தினர் வருகைக்கான தங்கள் கதவுகள் மூடப்படும் என கனத்த இதயத்துடன் தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், அதுவரை அறை முன்பதிவுகளுக்கு, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், உணவகம் தொடர்பான முன்பதிவுகள் அல்லது கூடுதல் விவரங்களுக்கு, 9003261981 என்ற எண்ணிற்கு அழைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.