;
Athirady Tamil News

இருட்டு அறைகளில்… பழம் காய்கறிகள் ஏதுமின்றி: ஹமாஸ் பிடியில் பணயக்கைதிகளின் அவல நிலை

0

காஸாவில் ஹமாஸ் படைகளிடம் சிக்கியுள்ள பணயக்கைதிகள் இருட்டு அறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், போதிய உணவு வழங்கப்படுவதில்லை எனவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை 50 இஸ்ரேலிய பெண்கள்
கத்தார் மற்றும் எகிப்து நாடுகள் முன்னெடுத்த மத்தியஸ்த ஒப்பந்தங்களின் அடிப்படையில், இதுவரை 50 இஸ்ரேலிய பெண்கள் மற்றும் சிறார்கள் ஹமாஸ் படைகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 17 தாய்லாந்து நாட்டவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு குடிமக்கள் பலரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அதிரடி தாக்குதலை அடுத்து, 160க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய மக்களை பணயக்கைதிகளாக கொண்டு சென்றனர்.

இதில், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் எவருமே, இந்த 50 நாட்களில் என்ன நடந்தது என்பது குறித்து வெளிப்படையாக எந்த தகவலையும் வெளிப்படுத்தவில்லை.

அப்படியான தகவல்கள் எஞ்சியுள்ள பணயக்கைதிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்றும் அஞ்சப்படுகிறது. ஆனால் விடுவிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ நிபுணர்களிடமிருந்து சில விவரங்கள் மெதுவாக வெளிவரத் தொடங்கியுள்ளன.

விடுதலையான 17 தாய்லாந்து நாட்டவர்களும் சிகிச்சை மேற்கொள்ளும் Shamir Medical Center-ன் தலைவர் Ronit Zaidenstein தெரிவிக்கையில், ஹமாஸ் பிடியில் இருந்த அந்த 50 நாட்களும் மிகவும் சத்தற்ற உணவுகளே வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

2 மணி நேரம் மட்டுமே மின் வெளிச்சம்
மேலும் சிகிச்சை நாடி வந்தவர்கள் சுமார் 10 சதவீதம் வரையில் உடல் எடை குறைந்து காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெரும்பாலும் இருட்டு அறைகளிலே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், நாளுக்கு 2 மணி நேரம் மட்டுமே மின் வெளிச்சம் அளிக்கப்படுவதாகவும் அந்த மருத்துவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

பணயக்கைதிகளுக்கு உணவாக சாதம், பதப்படுத்தப்பட்ட ஹம்முஸ், ஃபாவா பீன்ஸ், மற்றும் சில சமயங்களில் பிடாவுடன் உப்பு சேர்க்கப்பட்ட சீஸ் ஆகியவையும் வழங்கியுள்ளனர். ஆனால் காய்கறிகள், முட்டை, பழங்கள் என எதையும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

போருக்கு முன்னர் ஹமாஸ் படைகள் பதுக்கிவைத்த உணவுகள் இவையாக இருக்கலாம் எனறும், போர் தொடங்கிய பின்னர் காஸாவில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

12 வயது பிரான்சில் பிறந்த இஸ்ரேலிய சிறுவன் Eitan Yahalomi தெரிவிக்கையில், பணயக்கைதியாக இருக்கும் போது 16 நாட்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதாக வெளிப்படுத்தியுள்ளான்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.