;
Athirady Tamil News

பிரித்தானியாவில் வசிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0

பிரித்தானியாவில் விற்பனை செய்யப்பட்ட சிறிய அளவிலான சாக்லேட்களில் போதையை ஏற்படுத்த கூடிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக நாட்டிங்ஹாம்ஷயர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் மான்ஸ்ஃபீல்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட சிறிய தொகுப்பு சாக்லேட்களில் ஹாலுசினோஜெனிக்(மாய தோற்றத்தை ஏற்படுத்த கூடிய) காரணிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த போதைப் பொருள் சாக்லேட்களை சாப்பிட்ட பொதுமக்கள் சிலர் உடல்நல கோளாறுக்கு உள்ளானதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.

விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இது தொடர்பாக டிடெக்டிவ் காவலர் லூக் டோட் வழங்கிய தகவலில், சாக்கெட்களில் எந்தவொரு போதைப்பொருட்களும் இருந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

ஆனால் தடயவியல் சோதனையில், வணிக கடையில் காலி-கோல்ட் என குறிப்பிடப்பட்டு இருந்த ஆரஞ்சு நிற பெட்டிகளில் இருந்த சிறிய தொகுப்பு சாக்லேட் பார்களில் மட்டும் கஞ்சாவில் உள்ள மயக்கத்தை ஏற்படுத்த கூடிய சிலோசின் மற்றும் THC இருப்பது சிறிய அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

எனவே மேலே குறிப்பிடப்பட்ட சாக்லேட் பார்களில் உள்ள அடையாளங்களுடன் ஒத்துப் போகும் சாக்லேட் பார்களை மக்கள் யாரும் சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அத்தகைய அடையாளங்களுடன் கூடிய சாக்லேட் பார்களை சாப்பிட்டு உடல் நல கோளாறு ஏற்படுவதை உணர்ந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.