;
Athirady Tamil News

தாடியில் 187 கிறிஸ்துமஸ் மிட்டாய்களை நுழைத்து புதிய உலக சாதனை

0

உலகமே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உள்ள நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க பலர் ஆசைப்படுகிறார்கள். அந்த நம்பிக்கை அவர்களிடம் உள்ள அசாதாரன திறமைகளை வெளிக்கொண்டு வருகிறது. சிலர் உலக சாதனைகளை முறியடிப்பதையே தங்கள் வாழ்க்கையில் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.

இன்னும் சில நாட்களில் உலகமே கிறிஸ்மஸ் கொண்டாடும் வேளையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜோயல் ஸ்ட்ராசர் (Joel Strasser) என்ற நபர் கிறிஸ்துமஸ் உற்சாகத்தில் தாடி வளர்த்துள்ளார். சமீபத்தில் தனது தாடியில் அவர் 187 கேன்ஸ் மிட்டாய்களை (Canes Candy) செருகி கின்னஸ் சாதனை (Guinness World Records) படைத்தார்.

இந்த சாதனையை முறியடிக்க ஜோயல் நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருகிறார். கிறிஸ்மஸ் சீசனிலேயே கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க விரும்பினார். கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் சீசனில், ஜோயல் தனது முகத்தில் 710 கிறிஸ்துமஸ் Baubles அணிந்து தனது சொந்த சாதனையை முறியடித்தார்.

தற்போது இன்னொரு புதுமையான முயற்சியை மேற்கொண்டு உலக கவனத்தை ஈர்த்துள்ளார். அவர் தனது தாடி மற்றும் முகத்துடன் சாதனைகளை முறியடிப்பதை தனது பணியாக மாற்றினார். இது தொடர்பான வீடியோவை கின்னஸ் புத்தகம் வெளியிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.