;
Athirady Tamil News

24 மணித்தியாலங்களில் பொலிஸாரிடம் சிக்கிய ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்

0

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் போதைபொருள் கடத்தல் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட பொலிஸாரின் விசேட நடவடிக்கைகளின் போது 2,121 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 2 கிலோ 232 கிராம் ஹெரோயின், 178 கிலோ கஞ்சா, 769 கிராம் ஐஸ் போதைப்பொருள், 35 கிலோ (Ash), 626 கிராம் மாவா, 30,550 கஞ்சா செடிகள் மற்றும் 3,489 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 2,121 சந்தேகநபர்களில், 12 சந்தேக நபர்கள் தடுப்பு உத்தரவுகளின் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் அவர்களில் 116 பேர் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் IRC பட்டியலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரை
மேலும், 5 சந்தேகநபர்கள் தொடர்பில் சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 133 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் நேற்றையதினம் (17.12.2023) அதிகாலை 4 மணியளவில் நாடளாவிய ரீதியில் இந்த விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

ஒன்பது மாகாணங்களுக்கும் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இந்த விரிவான நடவடிக்கையை மேற்பார்வையிட்டு ஒருங்கிணைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.