;
Athirady Tamil News

மாதம் 300 பூனைகள்., Cat Soupக்கு பெயர் பெற்ற உணவகம் மூடப்பட்ட காரணம் இதுதான்

0

மாதம் 300 பூனைகளை கொன்று வந்த புகழ்பெற்ற உணவகம் ஒன்று மூடப்பட்டது.

வியட்நாமில் Cat Soupக்கு பெயர் போன உணவகத்தை மூட அதன் உரிமையாளர் திடீரென முடிவு செய்துள்ளார்.

பூனைகளை கொன்று அறுத்ததற்காக திடீரென ஏற்பட்ட குற்ற உணர்ச்சியே உணவக வியாபாரத்தை நிறுத்த முடிவெடுத்ததற்குக் காரணம் என கூறப்படுகிறது.

வியட்நாமின் கியா பாவோ (Gia Bao) உணவகத்தின் உரிமையாளரான Pham Quoc Doanh இப்போது சமூக ஊடகங்களிலும் விலங்கு பிரியர்களிடையேயும் ஒரு நட்சத்திரமாக உள்ளார்.

கூட்டமே வராத உணவகம்
முன்பு, கியா பாவோ ஒரு சாதாரண உணவகமாக இருந்தது. அங்கு கூட்டமே வராததால், வியாபாரம் நஷ்டத்தில் இருந்தது.

உள்ளூர்வாசிகள் நீண்ட தூரம் பயணம் செய்து பூனை சூப் சாப்பிட்டு வந்தனர். இதன் மூலம், பூனை சூப்பை மெனுவில் சேர்க்க Pham Quoc Don முடிவு செய்தார். இதனால், வியாபாரம் சூடுபிடித்தது.

சூப்பிற்காக, பூனைகளை தண்ணீரில் வாளிகளில் மூழ்கடித்து கொன்றனர். தேவை அதிகரித்ததால், ஒரு மாதத்திற்கு 300 பூனைகள் வரை உணவகத்திற்கு கொண்டு வர வேண்டியிருந்தது.

குற்ற உணர்ச்சி
அதன் பிறகுதான் பாம் குவோக் டான் குற்ற உணர்ச்சியை உணர ஆரம்பித்தார். இதனால், விலங்கு பிரியர்கள் அமைப்பினரை தொடர்பு கொண்டார். அவர்கள் உணவகத்தில் இருந்த எஞ்சிய பூனைகளுக்கு தடுப்பூசி போட்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர்.

பாம் குவோக் உணவகத்திற்குப் பதிலாக மளிகைக் கடையைத் திறக்க முடிவு செய்தார்.

வியட்நாமின் ஒரு பகுதி பூனை இறைச்சியை உண்கிறது. வியட்நாமில் ஆண்டுதோறும் ஒரு மில்லியன் பூனைகள் உணவுக்காக கொல்லப்படுவதாக Humane Society International மதிப்பிடுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.