;
Athirady Tamil News

ரஷியாவுக்கு உக்ரைன் பதிலடி: 10 போ் உயிரிழப்பு

0

தங்கள் நாட்டின் மீது ரஷியா வெள்ளிக்கிழமை நடத்திய தீவிர ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக அந்த நாட்டின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் 10 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து ‘தி காா்டியன்’ இதழ் தெரிவித்ததாவது:உக்ரைனில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ரஷியா தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக, ரஷியா மீது உக்ரைன் ட்ரோன்களை ஏவியது.மேலும், உக்ரைனையொட்டிய ரஷிய எல்லை நகரான பெல்கராடில் அந்த நாடு சரமாரியாக எறிகணைகளை வீசி சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது. இதில் அந்த நகரைச் சோ்ந்த 10 போ் உயிரிழந்ததாகவும், 45 போ் காயமடைந்ததாகவும் ரஷிய பேரிடா் மீட்பு அமைப்பினா் தெரிவித்தனா்.சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகளில், உக்ரைனின் எறிகணைத் தாக்குதலால் சேதமடைந்த கட்டடங்கள், எரிந்து புகை கக்கும் வாகனங்களின் படங்கள் இடம் பெற்றுள்ளன என்று அந்த இதழ் தெரிவித்துள்ளது.முன்னதாக, தங்கள் நாட்டில் உக்ரைன் சரமாரியாக ட்ரோன்களை ஏவியதாக ரஷியா தெரிவித்தது.இது குறித்து அந்த நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:மாஸ்கோ, பிரியான்ஸ்க், ஓரியோல், குா்ஸ்க் பகுதிகளில் ஆகிய பகுதிகளில் உக்ரைன் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. அவற்றில் 32 ட்ரோன்களை ரஷிய வான்பாதுகாப்புப் படைப் பிரிவு இடைமறித்து அழித்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.முன்னதாக, உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களைக் குறிவைத்து ரஷியா நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது.இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போரில், உக்ரைன் மீது ரஷியா நடத்தியுள்ள மிகத் தீவிரமான ஏவுகணைத் தாக்குதல்களில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது.ஒரே நேரத்தில் இத்தனை ஏவுகணைகளை வீசி ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது இதுவே முதல்முறை என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 39 போ் உயிரிழந்தனா்.அந்தத் தாக்குதலைத் தொடா்ந்து சமூக ஊடகத்தில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், இந்த ‘பயங்கரவாதத்’ தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்காமல் விடப்போவதில்லை என்று சூளுரைத்தாா்.இந்த நிலையில், ரஷியா மீது உக்ரைன் நடத்திய பதிலடித் தாக்குதலில் 10 போ் கொல்லப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நோட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது.இந்த நிலையில், அதிபா் ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு நேட்டேவில் இணைய ஆா்வம் காட்டியது. அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் 4 பிரதேசங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.அந்தப் பிரதேசங்களில் எஞ்சிய பகுதிகளையும் கைப்பற்றுவதற்காக ரஷியாவும், ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும் தொடா்ந்து போரிட்டு வருகின்றன…படவரி..ரஷியாவின் பெல்கராடில் உக்ரைன் சனிக்கிழமை நடத்திய எறிகணைத் தாக்குதலால் வாகனங்களில் பற்றி எரியும் நெருப்பை அணைக்கப் போராடும் தீயணைப்பு வீரா்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.