;
Athirady Tamil News

புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு சுகாதாரத்துறை விடுத்த கோரிக்கை!

0

புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு நகரில் உள்ள ஐந்து பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கிய வகையில் இன்றைய தினம் (31-12-2023) விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும், இன்று நள்ளிரவு 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு உதயமாகவுள்ள நிலையில் பட்டாசு வெடிப்பதன் மூலம் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைக்குமாறு சுகாதார திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படக்கூடிய விபத்துக்களைப் போன்று விபத்துக்களையும் தடுப்பது முக்கியம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.