;
Athirady Tamil News

மருத்துவர்,தாதி போல் நுழைந்து ஹமாஸ் தளபதிகளை சுட்டுவீழ்த்திய இஸ்ரேல் படை : வைரலாகும் காணொளி

0

மருத்துவர், தாதியர், நோயாளி போல மாறுவேடத்தில் இஸ்ரேல் சிறப்பு படையினர் மருத்துவமனைக்குள் அதிரடியாக நுழைந்து மூன்று ஹமாஸ் அமைப்பினரை சுட்டுக்கொல்லும் காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேற்குகரையின் ஜெனின் நகரில் உள்ள இபென் சினா மருத்துவமனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி மருத்துவ சிகிச்சை பெற்றுவருவதாக இஸ்ரேல் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி
இதையடுத்து, மருத்துவர், தாதி, நோயாளி என வேடமணிந்த இஸ்ரேல் சிறப்பு படையினர் அதிரடியாக மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.

இஸ்ரேல் படையின் அதிரடி நடவடிக்கை
அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஹமாஸ் ஆயுதக்குழுவின் தளபதி முகமது ஜலாம்நிஹ், பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழுவை சேர்ந்த பசில் அய்மென் அல் குவாசி, முகமது ஆகிய 3 பேரையும் மாறுவேடத்தில் வந்த இஸ்ரேல் சிறப்புப்படையினர் சுட்டுவீழ்த்தினர்.

இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இஸ்ரேல் படையின் அதிரடி நடவடிக்கை தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.