;
Athirady Tamil News

ஹரிகரனின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பநிலை குறித்து ஏற்பாட்டு குழுப் பணிப்பாளர் வெளியிட்ட தகவல்

0

யாழில் நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்து அனைத்து கலைஞர்களும் திருப்தியாக நாடு திரும்பியுள்ளதாக ஹரிகரன் இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டு குழுப் பணிப்பாளர் ஷியா உல் ஹசன் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்தியாவில் கூட இவ்வளவு பெரிய ரசிகர்களை நாங்கள் பார்வையிடவில்லை. மக்கள் இவ்வளவு அன்பு கொடுத்ததை தாங்கள் பார்த்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிகழ்ச்சி இடைநடுவில் நிறுத்தப்படவில்லை. முழுமையாக நடாத்தப்பட்டது. இடையில் சிறிது நேரம் மாத்திரமே நிறுத்தப்பட்டது.

மக்களின் உணர்வின் வெளிப்பாடு
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் குறை என இதனை கூற முடியாது. மக்களின் உணர்வின் வெளிப்பாடு என்றே கூற வேண்டும்.

அருமையான நிகழ்ச்சி. இப்படியான ஒரு நிகழ்ச்சி கொழும்பில் கூட நடாத்தப்படவில்லை. இவ்வளவு நட்சத்திரங்களையும் பார்த்ததன் பிறகு அவர்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள்.

யாருக்கும் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக அறிவிப்பொன்று மாத்திரம் விடுக்கப்பட்டது. ஆனால், நிகழ்ச்சியை முழுமையாக நடாத்தினோம். எதிர்பார்க்க முடியாத கூட்டம் வந்தது.

பெரிய பிரச்சினை இல்லை
இவ்வளவு பெரிய ரசிகர்கள் ஒன்று கூடினால், எந்தவொரு ஏற்பாட்டாளராலும் கட்டுப்படுத்த முடியாது.

ஏற்பாட்டாளர்களின் பிழை என்று சொல்வதற்கு எதுவும் நடக்கவில்லை. ரசிகர்கள் முன்னோக்கி நகர்ந்தார்கள். அவ்வளவு தான். அதுவொரு பெரிய பிரச்சினை கிடையாது. அது மக்களின் உணர்வு வெளிப்பாடு. வெளிப்படுத்தி விதம் வித்தியாசமாக இருந்தது.

இந்தியாவில் கூட இவ்வளவு பெரிய ரசிகர்களை நாங்கள் பார்வையிடவில்லை” என கலைஞர்கள் கூறியதாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டு குழு கூறியுள்ளது.

தொழிலதிபர் இந்திரன் பத்மநாதன்
வடக்கில் பெரும் முதலீட்டை ஏற்படுத்தும் நோக்கில் தொழிலதிபர் இந்திரன் பத்மநாதனால் யாழில் மாபெரும் இசை நிகழ்ச்சி நேற்றையதினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் மூன்றாம் தரப்புக்கு வழங்கப்பட்டிருந்தது.

இவ்வாறு மூன்றாம் தரப்புக்கு வழங்கப்பட்டிருந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் முறையானாவிதத்தில் கையாலாமையே அங்கு ஏற்பட்ட குழப்ப நிலைக்கு காரணம் என அரசியல் மற்றும் சமூக தரப்புகளில் இருந்து அறிக்கைகளும் வெளியாகியுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.