;
Athirady Tamil News

கனடாவில் போலி சட்டத்தரணிகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

கனடாவில் போலி சட்டத்தரணிகள் தொடர்பில் மொன்றியல் சட்டத்தரணிகள் சங்கம் பொதுமக்களுக்கு குறிப்பாக குடியேறிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மொன்றியலில் இவ்வாறான போலி குடிவரவு சட்டத்தரணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் நகரிற்குள் புதிதாக பிரவேசிப்போருக்கு உதவுவதாக கூறி அவர்களிடம் மோசடி செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

கூடுதல் தொகை அறவீடு
மேலும், கனடாவில் குடியேறும் எண்ணத்தில் வருகை தரும் குடியேறிகளை இலக்கு வைத்து சட்டவிரோத சட்டத்தரணி கும்பல்கள் இயங்குவதாகவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த போலி சட்டத்தரணிகள் குடியேறிகளை சந்தித்து சில ஆவணங்களை செய்ய வேண்டியிருப்பதாக கூறி பணம் பெற்றுக்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வழமையாக சட்டத்தரணிகள் அறவீடு செய்யும் தொகையை விடவும் கூடுதல் தொகையை இவர்கள் குடியேறிகளிடம் அறவீடு செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தடை விதிப்பு
இவ்வாறு மோசடிகளில் ஈடுபடும் அதிகளவானவர்கள் சட்டத்தரணியாக கியூபெக்கில் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டவர்கள் அல்லது சொந்த நாட்டில் சட்டத்தரணிகளாக செயற்பட்ட குடியேறிகள் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இவர்களுக்கு கனடாவில் முறைப்படி சட்டத்தரணியாக பிரதிநிதித்துவம் செய்யும் தகுதி கிடையாது எனவும் இவ்வாறான நபர்கள் தொடர்பில் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.