;
Athirady Tamil News

எனது கணவரை கொன்றவர்களை வெளியுலகிற்கு காட்டுவேன்; அலெக்ஸி நவால்னி மனைவி சபதம்

0

எனது கணவரை கொன்றவர்களை நான் வெளியுலகிற்கு காட்டுவேன் என அலெக்ஸி நவால்னியின் மனைவி யூலியா நவல்னயா (Yulia Navalnaya) தெரிவித்துள்ளார்.

ரஷிய எதிர்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி (Alexei Navalny) மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, 19 வருடங்களுக்கும் மேலாக நீண்டகால சிறை தண்டனை விதிக்கப்பட்டு , ரஷிய தலைநகர் மாஸ்கோவிற்கு வடகிழக்கே, சுமார் 1200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கார்ப் (Kharp) நகரில் உள்ள சிறையில் புடின் அசால் அடைக்கப்பட்டார்.

அவர் விட்டு சென்ற பணிகளை நான் தொடர்ந்து செய்வேன்
இவ்வருடம் ரஷியாவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சில தினங்களுக்கு முன் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிறைச்சாலையில் நவால்னி உயிரிழந்தார்.

சிறைச்சாலை வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது மயங்கி விழுந்தவர், மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். அலெக்சி நவால்னியின் திடீர் மரணம் அவரது ஆதரவாளர்களையும், உலகெங்கும் உள்ள அரசியல் தலைவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், அலெக்ஸி நவால்னியின் மனைவி யூலியா நவல்னயா (Yulia Navalnaya) கணவர் மறைவு தொடர்பில் தொலைக்காட்சியில் கண்ணீர் மல்க பேசினார். இதன்போது அவர் கூறுகையில்,

3 தினங்களுக்கு முன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் என் கணவர், அலெக்சி நவால்னியை கொன்று விட்டார். கிட்டத்தட்ட 3 வருடங்களாக பல்வேறு துன்புறுத்தல்களை சிறையில் அனுபவித்து வந்த அலெக்சி சிறையிலேயே உயிரிழந்தார்.

அவர் விட்டு சென்ற பணிகளை நான் தொடர்ந்து செய்வேன். என் கணவருக்காக நாம் செய்ய கூடியது மேலும் தீவிரமாகவும், வேகத்துடனும் போராடுவதுதான்.

போர், ஊழல், அநீதி, சுதந்திரமில்லாத தேர்தல், கருத்து சுதந்திர முடக்கம், நாட்டில் நிலவும் அடிமைத்தனம் ஆகியவற்றுக்கு எதிராக அவர் முன்னெடுத்த போராட்டத்தை நாம் மேலும் வலுப்பெற செய்து போராட வேண்டும். எனது கணவரை கொன்றவர்களை நான் வெளியுலகிற்கு காட்டுவேன்.

அவர்களின் முகங்களையும், பெயர்களையும் உலகம் பார்க்குமாறு நாம் காட்டுவோம் என யூலியா கூறினார். யூலியா நவல்னயா, பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் ஆவார்

அதேவேளை அலெக்சி நவால்னியின் தாயிடமோ, வழக்கறிஞரிடமோ அவரது உடலை வழங்க ரஷிய அரசு மறுத்து விட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.